top of page
ap22101595859523_wide-6b5692973976c007c2bedfde61d64688a6a6606a.jpeg
YEA logo-03.png
SHDT logo - PNG-15.png

கிறிஸ்தவர்களாக அரசியலமைப்புத் திருத்தங்களைப் பற்றி சிந்தித்தல்

- சஞ்சித் டயஸ்

கோ ஹோம் கோட்டா!

இம்மூன்று வார்த்தைகளே எமது சமூக ஊடக ஊட்டங்கள்ரூபவ் தொலைக்காட்சித் திரைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சுவரொட்டிகள் எங்கும் பூசப்பட்டுள்ளன. 2022 ஏப்ரல் 9 முதல்ரூபவ் இலங்கையின் சமீபத்திய ரியல் எஸ்டேட் திட்டத்தை காலி முகத்திடல் (புயடடந குயஉந) நடத்துகிறது. ஆடம்பரமான புதிய 7- நட்சத்திர விடுதியில் அல்ல (இம்முறையாவது)ரூபவ் ஆனால் பொது மக்களால் நிறுவப்பட்ட எதிர்ப்பு கிராமம்: ரூஙரழவ்கோட்டா கோ கமரூஙரழவ் என்றழைக்கப்படும் கிராமம். இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் முதல் தடவையாகரூபவ் சராசரி குடிமக்கள் தங்கள் குரலை ஒலிக்கச் செய்வதிலும்ரூபவ் தாங்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களை வெளிப்படுத்துவதிலும்ரூபவ் தமக்கு இந்த விதியை ஏற்படுத்திய அரசியல்வாதிகளை மிகக் கடுமையான வார்த்தைகளில் வசைபாடுவதிலும் அச்சமின்றி உள்ளனர்.

இந்த நிலையினை நாம் எவ்வாறு அடைந்தோம்? பட்டியலிட்டு சொல்வதற்கு பல அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் முன்னேற்றங்கள் உள்ளனரூபவ் இந்த நிகழ்வுகளின் முழு பின்னணியையும் நான் விபரிக்க முயற்சித்தால்ரூபவ் நீங்கள் இந்த ஆக்கத்தினை இறுதிவரை படிக்க மாட்டீர்கள்! எவ்வாறாயினும் இந்த நிகழ்வுகளின் முன்னேற்றங்களைக் கண்டறிய விரும்புவோர் பின்வரும் நிகழ்வுகளை பார்க்கலாம்: 2005 இல் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைரூபவ் 2009 இல் உண்டான யுத்தத்தின் முடிவுரூபவ் 2010 இல் இருந்து இரண்டாவது ராஜபக்ச நிர்வாகம்ரூபவ் அரசியலமைப்பின் 18வது திருத்தம்ரூபவ் அந்த ஆட்சியின் இறுதியில் பாரிய அளவிலான ஊழல்கள் மற்றும் உறவுமுறையானோரிடையேயான பதவியமர்த்தும் முறைகள் மீதான பொது அதிருப்திரூபவ் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்படல்ரூபவ் மற்றும் ரூஙரழவ்நல்லாட்சிரூஙரழவ் அரசாங்கம் அமைதல்ரூபவ் 19 வது திருத்தம்ரூபவ் மத்திய வங்கி பிணைமுறி மோசடிரூபவ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (ளுடுPP) தோற்றம்ரூபவ் 2018 இன் அரசியலமைப்பு சதிரூபவ் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்ரூபவ் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவுசெய்யப்படல்ரூபவ் கொவிட் - 19 நிலைமைரூபவ் 2020 தேர்தலில் ரூஙரழவ்பொஹொட்டுவரூஙரழவ் (ளுடுPP) அரசாங்கம் தெரிவு செய்யப்படல்ரூபவ் 20 வது திருத்தம்ரூபவ் 2019 இன் வரி குறைப்பு மற்றும் இரசாயன உரங்கள் மீதான தடை.

பொதுமக்களின் கோபம் முதன்மையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீதும் மற்றும் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராகவுமே உள்ளது. ஆனால் இக்கோபத்திற்கு மத்தியில் தனி நபர் ஒருவரின் கைகளில் பாரியளவிலான அதிகாரம் குவிந்துள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறையின் தீமைகள் குறித்து ஒருமித்த கருத்து வெளிப்பட்டுள்ளது. இதனால் தான் ரூஙரழவ்கோட்டாகோகமரூஙரழவ் வில் உள்ள பொதுவான கோ~ங்களில் ஒன்றாக ரூஙரழவ்அமைப்பு-மாற்றம்ரூஙரழவ் ஆக காணப்படுகின்றது. தெளிவற்றதாக இருந்தாலும்ரூபவ் அதனை விளங்க சொல்லக் கூடிய ஒரு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்கும் 21வது திருத்தத்திற்கான அழைப்பாகும். இந்த அழைப்புக்கு ஜனாதிபதி ராஜபக்ச உள்ளடங்கலாக அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது.

இரண்டு வரைவுகள் இப்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன: ரூஙரழவ்சமகி ஜன பலவேகயரூஙரழவ்வின் (ளுதுடீ) பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தனி நபர் உறுப்பினர் சட்டமூலமாக சமர்ப்பிக்கப்பட்ட 21வது திருத்தம் மற்றும் தற்போதைய புதிய நீதி அமைச்சராக இருக்கும் விஜயதாச ராஜபகச வினால் முன்வைக்கப்பட்ட ரூஙரழவ்22வதுரூஙரழவ் திருத்தம் (பாராளுமன்ற நடைமுறைகளின் ஒழுங்கு காரணமாக இவ்வாறு பெயர் குறிப்பிடப்படுகின்றது) . 22 வது திருத்தம் அமைச்சரவையால் முன்வைக்கப்பட்டதாகத் தோன்றினாலும்ரூபவ் அது மிகவும் விரிவானதுரூபவ் மற்றும் - நான் இங்கு விளக்கவுள்ளதன் படி - மக்களின் கோரிக்கைகளுக்கு மிகவும் பதிலளிக்கக்கூடியது என்பதால்ரூபவ் முந்தைய வரைவில் (21 வது திருத்தம்) நான் கவனம் செலுத்துகிறேன். 21வது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படுகின்ற முக்கிய மாற்றங்களை தொகுத்து அவற்றின் முக்கியத்துவத்தைக் குறித்து முதலில் விபரிக்கின்றேன். அதனைத் தொடர்ந்து இந்த மாற்றங்களை நாம் கிறிஸ்தவர்களாகப் பார்க்கக்கூடிய ஒரு எல்லை வரையறையினை நான் பரிந்துரைக்கிறேன்.

குறிப்பிடத்தக்க பெரியளவினான திருத்தங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்: (1) ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் மற்றும் அதிகாரத்தை பாராளுமன்ற முறைக்கு மாற்றுதல்; (2) பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் தனிப்பட்ட ஆதாயத்திற்காக ரூசூ39;கட்சி மாறும்ரூசூ39; அல்லது தாவும் சுதந்திரத்தை கட்டுப்படுத்துதல் ; (3) நிறுவனங்களை ஜனநாயகப்படுத்துதலை மீண்டும் அறிமுகப்படுத்துதல்.

 

ஜனாதிபதி முறைமையை ஒழித்தல்

2வது குடியரசு அரசியலமைப்பின் (1978) மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி முறையானது ரூபவ் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம்ரூபவ் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை மாற்றுவதன் மூலம் இடையூறு செய்யப்பட முடியாத ஒரு நடைமுறையினையே தரிசனமாக கொண்டிருந்தது. இது நீண்டகால அரசாங்கக் கொள்கைகள் (குறிப்பாக பொருளாதார வளர்ச்சி தொடர்பான) செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகவே காணப்பட்டது. இதன் மூலம் அமைச்சர்கள்ரூபவ் அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய உயர் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் உட்பட பல அதிகாரங்கள் ஜனாதிபதியின் கைகளில் குவிந்திருப்பதை இங்கு காணலாம்.

அதன் பின்புரூபவ் அரசியலமைப்புச் சபை சில நியமனங்களைச் செய்வதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தினை பரிசீலனை செய்யும் அமைப்பாக செயற்பட்டதுடன் (17வது மற்றும் 19 வது)ரூபவ் மற்றும் நாடாளுமன்றச் சபையானதுரூபவ் திறம்படரூபவ் வெறும் முத்திரையாக இருந்தத நிலையில்ரூபவ் (18 வது மற்றும் 20வது) அரசியலமைப்பு 17வது திருத்தத்திற்கும் 20ம் திருத்தத்திற்கும் இடையே தொடர்ச்சியாக மாற்றம் பெற்றது வந்தது.

21வது திருத்தம் (ரூஙரழவ்21யுரூஙரழவ்) எல்லா வழிகளிலும் சென்று ஜனாதிபதி முறைமையை நீக்குகிறது. இதன்படி ஜனாதிபதி மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படாமல்ரூபவ் பாராளுமன்றத்தாலேயே தெரிவு செய்யப்படுவார். பாராளுமன்றம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அல்லது வேறு எந்த குடிமகனையும் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கலாம்ரூபவ் ஆனால் அந்த நபர் ஜனாதிபதியாக இருக்கும் காலம் வரைரூபவ் அவர் எந்த அரசியல் கட்சியிலும் பதவி வகிக்கவோ அல்லது உறுப்பினராகவோ இருக்கவோ முடியாது. இதன்மூலம் அவர் அரசியல் மற்றும்ரூபவ் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதனை எதிர்பார்க்கப்படுகின்றது. இது பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான ஜனாதிபதியின் கட்டுப்பாட்டை நீக்குகின்ற காரணத்தினால் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படுகின்றது.

ஜனாதிபதியின் அதிகாரங்களும் தொழிற்பாடுகளிலும் ஏற்படும் குறைப்பு என்பது பிரதம மந்திரி (ரூஙரழவ்Pஆரூஙரழவ்) மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும் தொழிற்பாடுகளையும் வலுப்படுத்துவதன் மூலம் ரூடவ்டு செய்யப்படுகின்றது. அமைச்சரவையின் தலைவராக பிரதமரே இருப்பார். அமைச்சுக்களின் நிர்ணயம் மற்றும் துறைகள் மற்றும் செயல்பாடுகளை ஒதுக்குவது உட்பட ஜனாதிபதியின் பல முடிவுகளில்ரூபவ் அவர் பிரதமரின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும். தற்போது நிலவுவது போல ஜனாதிபதியின் பதவியினை நீக்க நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படும் நடவடிக்கை இல்லாமல்ரூபவ் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி அளவிலானோரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமும் ஜனாதிபதியை பதவி நீக்க முடியும்.

பல தசாப்தங்களாகரூபவ் ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக உறுதியளித்த போதும்ரூபவ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்பதாக அதனை நிறைவேற்றத் தவறுகின்றனர். இந்தத் திருத்தம் கடந்த காலத்தில் இருந்த மற்றும் நிகழ்காலத்திலும் இருக்கின்ற மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கிறதுரூபவ் இறுதியாக இந்த நீண்டகால மாற்றத்தை நிறைவேற்றுகிறது. ஒப்பீட்டளவில்ரூபவ் 22 வது திருத்தம் (ரூஙரழவ்22யுரூஙரழவ்)ரூபவ் இந்த முறையை ஒழிக்கவில்லைரூபவ் மாறாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அதிகாரம் பகிரப்பட்ட நிலையான 19 வது திருத்தத்திற்குப் திரும்ப முற்படுகிறது. (வாசிக்க) இதுவே இவ் இரண்டு திருத்தங்களும் இடையே உள்ள மிக முக்கியமான வேறுபாடு என்பதோடுரூபவ் பொதுமக்களின் தற்போதைய கோரிக்கைகளை 22யு பூர்த்தி செய்யவில்லை எனக் கருதுவதற்கு இதுவே காரணம் ஆகும்.

 

ரூஙரழவ்கட்சி தாவுதல்ரூஙரழவ் மீதான கட்டுப்பாடுகள்

21யுரூபவ் தனிப்பட்ட நலனுக்கான ரூசூ39;கட்சித் தாவல்களைத்ரூசூ39; தடுக்கும் திருத்தங்களை உள்ளடக்கியுள்ளது. இது நீண்டகாலமாகவே தற்போதுள்ள அமைப்பில் உள்ள பலவீனமாகவும்ரூபவ் பொதுமக்களிடையே குறிப்பிட்ட அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அமைச்சர் பதவிகளை வழங்குவதாக தெரிவிக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்ரூபவ் அரசாங்கத்தில் சேர ஆசைப்படுகிறார்கள். இது 1978ல் இருந்து ஏறக்குறைய ஒவ்வொரு பாராளுமன்ற சுழற்சியிலும் இடம்பெற்றதுரூபவ் மேலும் 2018 அரசியலமைப்பு சதியின் போதுரூபவ் 2020 இல் 20 வது திருத்தத்தின் போதுரூபவ் மற்றும் மிக சமீபத்தில் கூடரூபவ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட ரூஙரழவ்புதியரூஙரழவ் இடைக்கால அரசாங்கத்தில் இந்நிலைமை காணப்பட்டது.

இந்த சட்டத்திருத்தங்கள்ரூபவ் எல்லை மீறும் உறுப்பினர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றனரூபவ் மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொருட்படுத்தாமல் - அத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது இருந்த கட்சியை தவிர்த்து வேறு எந்த அரசியல் கட்சியாலும் அமைக்கப்படும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை ஏற்க தகுதியற்றவர்கள் என கருதப்படுவர். இதன் பொருள் என்னவென்றால்ரூபவ் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கமாக கவர்ந்து இழுக்க அரசாங்கத்திற்கு கணிசமான அளவு குறைவான சந்தர்ப்பமே இருக்கும்ரூபவ் மேலும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் அவ்வாறு செய்வதற்கான ஊக்கத்தை இது கணிசமாகக் குறைக்கும். இதன் முடிவு? தங்களுக்கு வாக்களித்த மக்கள் வழங்கிய ஆணையை அவர்கள் உண்மையாகக் கடைப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம். 22யு இந்தப் பிரச்சினையைக் கையாளவில்லை .

 

நிறுவனங்களை ஜனநாயகப்படுத்துதலை மீண்டும் அறிமுகப்படுத்துதல்

21வது திருத்தம்ரூபவ் அரசியலமைப்பு சபையை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது: சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் உயர் அரசாங்க அலுவலகங்களுக்கான நியமனங்கள் தொடர்பான முடிவெடுக்கும் செயல்முறையில் அதிக பங்களிப்பை அனுமதிக்கும் ஒரு முக்கியமான நிறுவனம் ஆகும். தற்போதுரூபவ் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக இந்த நியமனங்களைச் செய்ய முடியும்ரூபவ் ஏனெனில் நாடாளுமன்ற சபை வருங்கால வேட்பாளர்கள் குறித்து மட்டுமே அதன் ரூஙரழவ்எதிர்வுகூறல்களைரூஙரழவ் வழங்க முடியும். அரசியலமைப்பு சபையின் பொறிமுறையானது நியமனங்களுக்கு அதிக சட்டபூர்வமான தன்மையை வழங்குவதுடன்ரூபவ் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்.

21யு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணையத்திற்கு (ஊஐயுடீழுஊ) அரசியலமைப்பு அங்கீகாரத்தை மீண்டும் அறிமுகப்படுத்துகிறதுரூபவ் மேலும் தணிக்கை சேவை ஆணையம் மற்றும் தேசிய கொள்முதல் ஆணையத்தை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக கட்டமைக்கப்பட்ட மற்றும் வலுப்படுத்தப்பட வேண்டிய முக்கியமான நிறுவனங்கள் இவையாகும் - குறிப்பாக பெரிய அளவிலான ஊழல் - இது பொதுக் கடனை அதிகரிக்கின்றது என்பதுடன் ஏழை வரி செலுத்துபவர்களால் அது சுமக்கப்படுகிறது. இந்த விதிமுறைகள் 20 வது திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டனரூபவ் இது தற்போதைய ஆட்சியின் நிர்வாகத்தை மேலும் சட்டவிரோதமாக்கியது.

இறுதியாகரூபவ் 21யு இரண்டு புதிய நிறுவனங்களை அறிமுகப்படுத்துகிறது - தேசிய பாதுகாப்பு சபை மற்றும் தேசிய சபை. இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் நடந்த நிகழ்வுகளுக்கான பதில்களாக இவைகளை பார்க்க முடியும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தேசிய பாதுகாப்பு சபையின் செயலிழந்த செயல்பாட்டின் விளைவின் ஒரு பகுதியாகவே குற்றம்
சாட்டப்பட்டுள்ளன் 21யு ரூபவ் யார் இதில் ரூடவ்டுபட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறதுரூபவ் மேலும் அது செயல்படுவதை அரசியலமைப்புத் தேவையாக்குகிறது. மேலும்ரூபவ் சமீபகால மக்களின் போராட்டங்கள் முன்னெப்போதும் கண்டிராத அளவில் குடிமக்களின் செயல்பாட்டினைக் காட்டியுள்ளனரூபவ் மேலும் கொள்கை வகுப்பில் நேரடியான அவர்களின் ரூடவ்டுபாட்டிற்கான விருப்பத்தையும் காட்டுகின்றன. அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு பொதுமக்களை அனுமதிப்பதன் மூலம்ரூபவ் நிர்வாகத்தில் நேரடியாக பொதுமக்கள் பங்கேற்பதை தேசிய சபை எளிதாக்கும்.

கிறிஸ்தவர்களாக 21ம் திருத்தத்தை நோக்கி நகர்தல்

இவற்றையெல்லாம் பற்றி நாம் நினைக்க வேண்டியது என்ன? இவையெல்லாம் கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஏதாவது வகையில் முக்கியமாக அமையுமா? அமைய வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

இயேசுவின் மனு அவதாரமே அவருடைய மீட்புப் பணியின் தொடக்கப் புள்ளியாக இருந்தது. அவர் நம்மிடையே வாழவும்ரூபவ் நம் எல்லா உணர்ச்சிகளையும் அனுபவிக்கவும்ரூபவ் நம் வலியையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளவும் வேண்டுமென்பதற்காக. பரலோகத்தின் மகிமையை விட்டுவிட்டு மனித உருவம் எடுத்தார். இயேசுவைப் பின்பற்றுபவர்களாகிய நாமும் அவதாரமாகவே வாழ அழைக்கப்படுகிறோம் - சக குடிமக்களை விட்டு பிரிந்து நிற்காமல்ரூபவ் அவர்களின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு அவர்களுடன் ஒன்றாக இருத்தல் வேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு தொந்தரவு தருகிற விடயம் எதுவோ அது நம்மையும் தொந்தரவு செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள் ஆகும். மோசமான ஆட்சி முறை என்பதும் இதில் உள் அடங்கும்.

21 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் ஆட்சியைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகின்றது? நிறையவே உள்ளது - ஆனால் நாம் அதை கவனமாக படித்தால் மட்டுமே. நாம் பழைய ஏற்பாட்டு மாதிரிகளை நகலெடுக்க முடியாதுரூபவ் நம்மிடம் அது எதிர்பார்க்கப்படுவதுமில்லை. இஸ்ரவேல் தேசம் முதலில் கடவுளால் நேரடியாக ஆளப்பட்ட ஒரு இறையாட்சியாகும்ரூபவ் பின்னர் அதனை தொடர்ந்து கடவுளுக்கும் அவருடைய கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்தவராக எதிர்பார்க்கப்படும் ஒரு இராஜாவுடைய முடியாட்சிக்கு உட்பட்டது. வெளிப்படையாகவேரூபவ் இது இன்று கிறிஸ்தவர்கள் பரப்புரை செய்ய வேண்டியதொன்றல்ல. ஆனால் சிறப்பான ஒரு ஆட்சி முறை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து வேதாகமத்தில் ஏராளமான விடயங்கள் உள்ளன.

முதலாவதாகரூபவ் வேதாகமம் முழுவதும் மனிதர்களின் தவறும் நிலை மற்றும் அவர்களின் பாவ சுபாவம் குறித்து பேசுகிறது. ஆட்சி மற்றும் தலைமைத்துவத்தைப் பற்றி கிறிஸ்தவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டிய முக்கியக் கொள்கையாக இது இருக்கின்றது. குறிப்பாக இலங்கையின் அரசியலில்ரூபவ் மக்கள் ஒரு ரூசூ39;மீட்பாளர்ரூசூ39; உருவத்தைத் தேடும் போக்கு எப்போதும் காணப்பட்டது: ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்த்து பொருளாதார செழிப்பையும் மனித வளத்தையும் வழங்குவார் என எதிர்பார்க்கப்படும் . மீண்டும் மீண்டும்ரூபவ் முடிவுகளால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் - மேலும் கிறிஸ்தவர்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இந்த கதாபாத்திரங்களில் நுழையும் நபர்கள் தவறு செய்யக்கூடியவர்கள் - அவர்கள் தவறான நபர்களிடம் ஆலோசனைகளை பெறுகிறார்கள்ரூபவ் அவர்கள் சரியான விடயத்திற்கு மேலாக பிரபலமான விடயத்தையே முதன்மைப்படுத்துகிறார்கள்ரூபவ் மேலும் அவர்கள் ஊழல் மற்றும் அநீதிக்கு கண்ணை மூடிக்கொள்கிறார்கள். எனவேரூபவ் அரசாங்க அமைப்புகளைப் பற்றி நாம் சிந்திக்கும்போதுரூபவ் எல்லா மக்களும் பாவிகள் என்பதையும்ரூபவ் எல்லா விடயத்தையும் சரியாகச் செய்வார் என்று யாரையும் நம்ப முடியாது என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாகரூபவ் இஸ்ரவேலர்கள் முதன் முதலில் ஒரு ராஜாவைக் கேட்டபோதுரூபவ் தீர்க்கதரிசி சாமுவேல் ஒரு மனிதனிடம் அத்தகைய சக்தியைக் குவிப்பதால் ஏற்படும் ஆபத்துகளைக் குறித்து மிகத் தெளிவாக வெளிப்படுத்தினார். (1 சாமு. 8:10 -22). அத்தகைய உருவம் எவ்வாறு தவிர்க்க முடியாதபடி தங்களை தாமே வளப்படுத்திக் கொள்ளும் என்பதோடுரூபவ் மேலும் அவர்களின் சுதந்திரத்தை மிதித்துவிடும் என்பதையும் அவர் வெளிக்காட்டினார். இராஜா கடவுளின் எதிர்பார்ப்புகளைப் பின்பற்றுகிற ஒருவராக இருப்பினும் கூட இவைகள் நடக்கும். இருப்பினும்ரூபவ் இஸ்ரவேல் தேசம் இந்த எச்சரிக்கைகளை எல்லாம் நிராகரித்தது மேலும் ரூஙரழவ்எல்லா தேசங்களையும் போலரூஙரழவ் இருக்க விரும்பி கடவுளுடைய மக்கள் என்ற தங்கள் தனித்துவத்தை விட்டுக்கொடுத்தனர். அதிகாரச் செறிவு பற்றிய எச்சரிக்கைகள் இன்றும் உண்மையாகவே இருக்கின்றன : உலகம் முழுவதிலும்ரூபவ் வீட்டிலும் கூடரூபவ் ஒரு தனி நபருக்கு அதிக அதிகாரம் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளை நாம் பார்த்திருக்கிறோம்ரூபவ் மேலும் அதிக அதிகாரம் உள்ளவர்கள்ரூபவ் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் விதமாகரூபவ் குறிப்பாக மிக மோசமாக அதை எப்படி எளிதில் துஷ்பிரயோகம் செய்வார்கள் என்பதையும் நாம் அனுபவித்திருக்கிறோம். இது பலவீனமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ளரூபவ் ரூசூ39;விதவைகள்ரூபவ் அனாதைகள் மற்றும் அன்னியர்கள்ரூசூ39; மீதான கடவுளின் விசேட அக்கறையினையையும் அவமதிக்கின்றது. (லேவியராகமம் 19:34ரூபவ் உபாகமம் 10 :18)

மூன்றாவதாகரூபவ் வேதாகமம் முழுவதிலும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்துவம் நிறைந்துள்ளது. பழைய ஏற்பாட்டு இராஜாக்களுடன்ரூபவ் இந்த முக்கியமான பாத்திரத்தை தீர்க்கதரிசிகள் செய்தார்கள்ரூபவ் அவர்கள் இராஜாக்களை கடவுளுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாக நிறுத்தியதுடன்ரூபவ் அவர்கள் இஸ்ரவேல் மக்களை தவறாக வழி நடாத்திய போது கடவுளின் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். ஒரு வகையில்ரூபவ் அவர்கள் அந்தக் காலத்தின் ‘எதிர் கட்சி’களாக இருந்தனர் (“நீயே அந்த மனிதன் ! ” - 2 சாமு. 12:7 என்ற வலுவான வார்த்தைகளால் பத்சேபாளுடன் தாவீது மன்னனின் பாவத்தை நாத்தான் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதை நினைத்துப் பாருங்கள். அப்போஸ்தலர்களில்ரூபவ் எருசலேமின் சபை கிறிஸ்தவத்தின் புதிய செய்தியை பரப்புவதற்கு தலைமைத்துவத்தை வழங்கியது (அப்போஸ்தலர் 15)ரூபவ் மேலும் பவுல் தான் பெற்ற வெளிப்படுத்துதலை அவர்களிடம் எடுத்துச் சென்று அவர்கள் பார்த்த மற்றும் அனுபவித்தவற்றிற்கு ஏற்ப இருப்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் தன்னைப் பொறுப்புக்கூறுபவராக நிறுத்திக் கொண்டார் (கலாத்தியர் 2). இதேபோலவேரூபவ் புறஜாதிகளை நடத்துவதில் பேதுருவின் இரட்டை நிலைப்பாட்டைப் பற்றி பவுல் எவ்வாறு வெளிப்படையாக எதிர்த்தார் என்பதைக் குறித்து நாம் வாசிக்கின்றோம். (கலாத்தியர் 2:11-21). எனவேரூபவ் சிறந்த ஒரு ராஜாவான தாவீது முதல் (கடவுளின் இதயத்திற்குப் பிடித்த ஒரு மனிதன்) திருச்சபையின் முதல் தலைவரான பேதுரு வரையான அனைத்து மக்களும் பொறுப்புக்கு கூரலுக்கு உட்படல் வேண்டும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் நமது ‘விருப்பமான’ தலைவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்ரூபவ் அவர்கள் தவருகின்ற இடங்களில்ரூபவ் நாம் பாரபட்சமற்றவர்களாகவும்ரூபவ் அதிகாரத்திடம் உண்மையைப் பேசவும் தயாராக இருக்க வேண்டும்.

மனிதனின் தவறுகின்ற தன்மை. சக்தியைக் குவிப்பதால் ஏற்படும் ஆபத்து. பொறுப்புக்கூறலின் முக்கியத்துவம். 21வது திருத்தம்ரூபவ் அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்துரூபவ் அதிகாரத்தை அதிக பொறுப்பு வாய்ந்த பாராளுமன்றத்திற்கு மாற்றுவதுதோடு ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் முக்கியமான நிறுவனங்களை ஸ்தாபிப்பது என்ற மூன்று அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளதைக் காணலாம். அரசியலமைப்பின் இந்த அம்சங்களைப் பற்றி பேசுவதிலும் மேலும் எந்தத் திருத்தம் இறுதியாக முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவற்றைச் சேர்க்க அழைப்பு விடுக்கிறதிலும் திருச்சபைக்கு ஒரு பங்கு உள்ளது. அதன் உறுப்பினர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும்ரூபவ் கிறிஸ்தவ கண்ணோட்டத்தின் மூலம் இந்தச் சிக்கல்களைப் பார்க்கவும்ரூபவ் மேலும் இந்த செயல்முறைக்கு ஆதரவளிக்க குடிமக்கள் செயல்பாட்டில் ரூடவ்டுபடவும் சபை தொழிற்படலாம். ஆனால்ரூபவ் சட்டத்திருத்தங்கள் மட்டும் எங்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்காது. கிறிஸ்தவர்களாகரூபவ் மனித அவதாரமாக வாழ்வது என்பது இந்த சவால்களில் நாம் தொடர்ந்து மூழ்கி இருக்க வேண்டும் என்பதாகும். இந்த அமைப்புக்களுக்கு எங்களால் இயன்ற விதத்தில் ஆதரவளிக்க வேண்டும்ரூபவ் மேலும் அனைத்து குடிமக்களும் - குறிப்பாக விளிம்புநிலையில் உள்ளவர்கள் - செழித்துரூபவ் அர்த்தமும் கண்ணியமும் கொண்ட வாழ்க்கையை நடத்த அனுமதிக்கும் புதிய அரசியல் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கு உழைக்க வேண்டும்.

bottom of page